ஓடும் ரயிலில் 20 பவுன் நகை, பணத்துடன் தவறி விழுந்த பெட்டி மீட்பு.!!

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜித் கினி (வயது 25 )இவர் தனது உறவினருடன் சபரிமலை செல்லும் ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலில் இருந்து இறங்குவதற்காக தனது பெட்டிகளை கதவருகே எடுத்து வைத்தார் .அப்போது ஒரு பெட்டியை மட்டும் காணவில்லை .அந்த பெட்டிக்குள் 20 பவுன் நகை மற்றும் பணம் இருந்தது .ஆனால் ரயிலில் இருந்து கீழே எந்த இடத்தில் பெட்டி விழுந்தது ?என்பது அவருக்கு தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் செய்தார். அதன் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் கோவை ரயில்வே போலீசார் கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர் .அப்போது அந்த பெட்டி கோவை பீளமேடு ரெயில் நிலையத்துக்கு இடையே ஒரு புதருக்குள் கிடந்தது தெரியவந்தது .உடனே அதை போலீசார் மீட்டனர். அதேபோலீசார் சுஜித் கினி முன்னிலையில் திறந்தனர் .அந்த பெட்டிக்குள் அவர் கூறியபடி 20 பவுன் தங்க நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பெட்டியை போலீசார் சுஜித்க்கினிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் திறமையை பொதுமக்களும், சுஜித் கினியும் பாராட்டினார்கள்.