கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூங்கில்மடை குட்டை பகுதியை சேர்ந்தவர் காளி சாமி (வயது 37). கூலி தொழிலாளி.இவரது மனைவி மயிலாள். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1- 10- 20 22 அன்று அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இரட்டை குழந்தைகளாக பிறந்தது.இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி, மனைவி மயிலாள் திடீர் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்.இந்த நிலையில் அவரக்கு பிறந்து 2 மாதங்களான பெண் குழந்தைக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .வழியில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து காளி சாமி காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply