முட்டை விலை தொடர் சரிவை அடுத்து தினசரி விலை நிர்ணயம் செய்வதை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படும் நிலையில், தினசரி 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அப்படி உற்பத்தியாகும் முட்டைகள் சத்துணவு மற்றும் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பறவை காய்ச்சல், சபரிமலை சீசன் உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகின்றன. கடந்த 7ஆம் தேதி 6 ரூபாய் 70 காசுகளாக இருந்த முட்டை விலை இரண்டு வாரத்தில் ஒரு ரூபாய் 30 காசுகள் வரை சரிந்து தற்போது 5 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் 15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை விலை தொடர்ந்து இறங்கி வருவதால் தினசரி விலை நிர்ணயம் செய்வதை நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிறுத்தியுள்ளது. வரும் 28ஆம் தேதி வரை தற்போது உள்ள 5 ரூபாய் 40 காசுகள் விலையே தொடரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.








