வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெடித்த வன்முறையில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தற்போது ஹசீனா அடுத்த மாதம் வங்கதேசம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியானது தற்போது கலைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த கட்சியின் சார்பாக நேற்று அங்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. டாக்காவில் அதிகாலையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. சட்டோகிராமில் இடைக்கால அரசின் முன்னாள் தலைவர் முகமது யூனுசின் பூர்வீக இல்லம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள முகமது யூனுசின் கிராமீன் வங்கி கிளைகளுக்கும் தீவைக்கப்பட்டது. பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக எல்லைப்பாதுகாப்பு வங்கதேசம் அமைப்பின் 96 படைப்பிரிவுகளை சேர்ந்த சுமார் 3000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







