பால் விலை உயர்வு இல்லை

பால் விலையை உயர்த்​தப் போவ​தாக எழுந்த தகவலை​யடுத்​து, உறு​திப்​படுத்​தப்​ப​டாத செய்​தி​களை பொது​மக்​கள் நம்ப வேண்​டாம் என ஆவின் நிர்​வாகம் விளக்​கமளித்​துள்​ளது.

பால் விலையை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்த வேண்​டும் என அரசுக்கு ஆவின் நிர்​வாகம் பரிந்​துரை செய்​த​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இந்த பரிந்​துரைக்கு பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் பால் விலை உயர்வு தொடர்​பான தகவலுக்கு விளக்​கம் அளிக்​கும் வகை​யில் ஆவின் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் பால் விலையை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்​துரை செய்​துள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஆவின் நிறு​வனம் பொது​மக்​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, தரமான பால் மற்​றும் பால் பொருட்​களை நியாய​மான விலை​யில் தொடர்ந்து வழங்கி வரு​கிறது.

பால் உற்​பத்​தி​யாளர்​களின் நலன், பால் கொள்​முதல் விலை மற்​றும் நுகர்​வோரின் நலன் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து ஆவின் செயல்​பட்டு வரு​கிறது.

பால் விலை உயர்வு தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வெளி​யான செய்தி தவறான செய்​தி​யாகும். எனவே பொது​மக்​கள் இது​போன்ற உறு​திப்​படுத்​தப்​ப​டாத செய்​தி​களை நம்ப வேண்​டாம்.