அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் நேற்று செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை 100 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய இத்தொகுப்பு, ஒரு தொகுப்பு ரூ.200 என்ற விலையில், 128 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடலைப் பருப்பு 250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், மல்லி விதை 150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு 100 கிராம், உடைத்த உளுத்தம் பருப்பு 100 கிராம், சீரகம் 50 கிராம் மற்றும் சோம்பு 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையிலான 10 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
பண்டிகை கால ‘பம்பர் ஆஃபர் – 200க்கு 10







