டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானியை தாக்கிவிட்டு, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து பெரும் அசம்பாவிதத்தை நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி அல் ஹம்மாமி, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை போல தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் விமானத்தின் என்ஜினை ஆஃப் செய்து இருக்கலாம் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்து கடந்த 30 ஆம் தேதி, 174 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என 180 பேருடன் இஸ்ரேலை நோக்கி பிளை துபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த ஹமாம் அல் ஹம்மாமி, விமானத்தை இயக்கி கொண்டு இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயன்றார்.எனினும், ஹமாமியின் இந்த சதியை இந்திய விமானி ஸ்மித் மச்சார் உயிருக்கு போராடிய நிலையிலும் வெற்றிகரமாக தடுத்தார். சவுதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியதும் ஹமாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. டெல் அவிவ் நகருக்கு பறந்து கொண்டிருந்த அந்த விமானம் போயிங் 737 ரகத்தை சேர்ந்தது ஆகும்.
விமானத்தை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அதன் என்ஜினை ஆஃப் செய்து விபத்தை ஏற்படுத்த ஹமாமி திட்டமிட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இத்தாலி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி, அல் ஹம்மாமியின் உண்மையான திட்டம் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கொலை செய்துவிட்டு விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாக இருந்துள்ளது.
டெல் அவிவ் நகரின் உயரமான கட்டிடத்தில் விமானத்தை மோத வைத்து பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்காகவே, பிரார்த்தனை செய்ய போவதாக நாடகமாடிவிட்டு, இந்திய விமானியை தாக்கியுள்ளார்.அதற்குள் இந்திய விமானி துணிச்சலாக செயல்பட்டு அவரை எதிர்த்து போராடியதால், தனது அசல் திட்டத்தை கைவிட்டுவிட்டு, விமானத்தை ஒரு பாலைவனத்தில் மோத வைக்க முடிவு செய்து இருக்கிறார். விமானத்தை மோத வைக்க பிளான் செய்த அவர், அது நடக்கவில்லை என்றதும், என்ஜினை ஆஃப் செய்துள்ளார்.ஆட்டோ பைலட் மோட் ஐ ஆப் செய்து விட்டு கண்ட்ரோல் ஸ்டிக்கையும் கீழே தள்ளியுள்ளார். இதனால், விமானம் 30 செகண்டில் 16 ஆயிரம் அடி கீழ்நோக்கி சரிந்துள்ளது. அதற்குள் விமானத்தில் இருந்தவர்களை காக்பிட் அறைக்குள் வர வைத்து துணை விமானியை மடக்கி பிடித்து, இந்திய விமானி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திற்குள் இருந்து பயணிகள் எடுத்த வீடியோக்களில் கேபினில் எமெர்ஜென்சி லைட்கள் ஆனில் இருந்ததை பார்க்க முடிந்தது.இதன் மூலம் நடுவானில் என்ஜின் ஆஃப் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓமன் நாட்டை சேர்ந்த அல் ஹமாம் ஹம்மாமியின் செயல் பயங்கரவாத செயல் என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அந்த விமானி எப்படி டெல் அவிவுக்கு வரும் விமானத்தை இயக்க அனுமதி கிடைத்தது எப்படி என்றும் விசாரித்து வருகிறார்கள்.






