சுந்தர் பிச்சை ஒரு மான்ஸ்டர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில், ‘கூகுள்’ நிறுவனத்தில் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் கலந்துகொண்டார்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு ட்ரம்ப் மற்றும் நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சுந்தர் பிச்சையைச் செய்தியாளர்களிடம் பேச அழைத்தனர். அப்போது, அவர் அனைவருக்கும் ‘நன்றி’ தெரிவித்தார். இதனிடையே குறுக்கிட்ட அதிபர் ட்ரம்ப், ‘இவர் ஒரு மான்ஸ்டர் (இமாலய வெற்றியாளர்). ஆனால், இவரைப் பொதுவெளியில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. தினமும் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இவரைப் போன்ற தொழில்நுட்ப தலைவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘அரசியல்வாதிகளைப் போலப் பொதுமக்களிடம் பெரிய விளம்பரம் இல்லாமல், அதே சமயம் தொழில்துறையில் பிரம்மாண்ட ஆதிக்கம் செலுத்தி வருபவர் இவர்’ என்றும் கூறினார். சுந்தர் பிச்சையை ‘மான்ஸ்டர்’ என்று ட்ரம்ப் பாராட்டியபோது, இது ஒரு ‘நல்ல டேக்லைன்’ என்று சுந்தர் பிச்சை கூறினார். இதனால், அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.