இஸ்ரேல் உருவாக்கி வைத்திருக்கும் ‘அயன்டோம்’ எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ரொம்பவும் பேமஸானது.அதேபோன்ற ஒரு அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது.
இந்த காலங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஈரான் போர் நமக்கு காட்டியிருக்கிறது. எனவே இந்தியாவுக்கும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.எனவே ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ என்கிற திட்டத்தை இந்தியா ரெடி செய்து வருகிறது. இந்த புதிய வான் பாதுகாப்பு அமைப்பானது குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் தொடங்கி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், வானில் உள்ள உளவு செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு வலையமைப்பாகும். இஸ்ரேலின் அயன்டோம் போன்ற பாதுகாப்பை இது கொடுக்கும்.
புரஜெக்ட் குஷா என்பது நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். இது எதிரி நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நீண்ட தூரத்திலேயே கண்டறிந்து அழிக்கும்.இது ட்ரோன் கூட்டங்களை அழிக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இவை மூன்றும் இணைந்துதான் செயல்பட இருக்கின்றன.
இந்த பாதுகாப்பு அமைப்பானது சென்சார்கள், சி41 அமைப்பு மற்றும் ஆயுத தளங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. முதல் அமைப்பு சென்சார்கள் மற்றும் மின்னணு ஒளியியல் கருவிகள் மூலம் எதிரிகளை கண்டறியும். பின்னர் சி41 அமைப்பு மூலம் கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து போர்க்களத்தின் முழுமையான படத்தை உருவாக்கும். பின்னர் ஆயுத தளங்கள் அமைப்பு ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் லேசர் ஆயுதங்கள் மூலம் எதிரிகளை வீழ்த்தும். இப்படியான அயன்டோம் செட்டப் ஏற்கெனவே இந்தியாவிடம் இருந்தது. ஆனால் மிக குறைவான இடத்திற்கு மட்டுமே இதை வைத்து பாதுகாப்பு கொடுக்க முடிந்தது. இப்போது, பாதுகாப்பு கொடுக்கும் இடத்தின் பரப்பளவை விரிவாக்க இந்திய ராணுவம் முயன்று வருகிறது. இந்த அமைப்பில் எல்-70 போன்ற ஏவுகணைகளும் திறம்பட பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.







