லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்

ஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக மகேஸ்வரி ஐபிஎஸ் இருந்துவரும் நிலையில் அவருக்கு தற்போது கூடுதலாக அத்துறையின் இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், அத்துறையின் இயக்குநர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் ஏ.டி.ஜி.பி. அல்லது டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.