தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நவீன உபகரணங்களை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதுவரை பெயரளவுக்கு மட்டுமே இருந்து வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையை, இனிமேல் முழுமையாக செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலமைச்சரின் இந்த உத்தரவை அனைத்துத் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி மற்றும் கனிவான உத்தரவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.







