கோவையில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரவி. இவர் காட்டூர் காவல் நிலைய (விசாரணை பிரிவு) இன்ஸ்பெக்டராகவும் அதே கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தசுமதி, கடைவீதிக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜமுனா குனியமுத்தூர் விசாரணை பிரிவுக்கும் சேலம் மேட்டூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலசுந்தரம் சிங்காநல்லூர் விசாரணை பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காசி பாண்டியன் ராமநாதபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், இங்கு பணிபுரிந்த முத்துலட்சுமி சாய்பாபா காலனி விசாரணை பிரிவுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த வினோத்குமார் பீளமேடு விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் இன்று பிறப்பித்தார்.