இன்று ஆளுநர் உரையுடன் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவை முனைவர் செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழக ஆளுநரை வரவேற்றனர்.
அதேபோல் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி கையில் எதிர்ப்பு வாசகங்கள் உள்ள பதாகைகளை வைத்திருந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் பதாகைகளுடன் வந்துள்ளனர். வாயை திறங்க சிஎம் சார், ‘கேக்குதா சிஎம்.. ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே?, திரையில் நாயகன் தரையில் வில்லன் உள்ளிட்ட பதாகைகளுடன் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.அதேபோல அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ள நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.







