தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.பிரேம் ஆனந்த், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகவும், திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலா, காரைக்குடி மாநகராட்சி ஆணையராகவும், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன், மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அதிகாரியாகவும், கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, கும்பகோணம் மாநகராட்சி ஆணையராகவும், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் எஸ்.செல்வபாலாஜி, நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையராகவும், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், சிவகாசி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத் துறை சேலம் மண்டல இயக்குநர் பி.அசோக்குமார், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராகவும், சிவகாசி மாநகராட்சி ஆணையர் கே.சரவணன், நகராட்சி நிர்வாகத் துறை தஞ்சாவூர் மண்டல இயக்குநராகவும், திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.சித்ரா, நகராட்சி நிர்வாகத் துறை சேலம் மண்டல இயக்குநராகவும், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஏ.சுல்தானா, திருச்சி மாநகராட்சி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் கே.சிவக்குமார், சென்னை மாநகராட்சி உதவி ஆணையராகவும், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.சரஸ்வதி, கோவை மாவட்ட துணை ஆணையராகவும், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் டி.நாராயணன், தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையராகவும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் எம்.செந்தில் முருகன், திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையராகவும், நகராட்சி நிர்வாகத் துறை திருநெல்வேலி மண்டல இயக்குநர் ஆர்.மகேஸ்வரி, சேலம் மாநகராட்சி துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாநகராட்சி துணை ஆணையர் வி.நவீந்திரன், நகராட்சி நிர்வாகத் துறை திருநெல்வேலி மண்டல இயக்குநராகவும், கடலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையர் பி.எம்.என்.முஜிபீர் ரஹ்மான், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராகவும், நகராட்சி நிர்வாகத் துறை தஞ்சாவூர் மண்டல இயக்குநர் பி.விஜயலட்சுமி, நகராட்சி நிர்வாக இயக்குநரக மாநகராட்சி பிரிவு இணை இயக்குநராகவும், கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநர் கே.அச்சய்யா, நகராட்சிகள் பிரிவு இணை இயக்குநராகவும், நிர்வாகப் பிரிவு இணை இயக்குநர் எஸ்.சசிகலா, பொது சுகாதாரப் பிரிவுக்கும், மாநகராட்சிகள் பிரிவு இணை இயக்குநர் எஸ்.பாரிஜாதம், சாலை, பாலங்கள், தெருவிளக்குகள் பிரிவுக்கும், திட்டங்கள் பிரிவு இணை இயக்குநர் கே.உமாமகேஸ்வரி, கண்காணிப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.








