ஊராட்சி வார்டு மறுவரையறை

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 108 இடங்களில் (திருச்சி கிழக்கு) வென்ற தவெக ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச.
ஜோசப் விஜய் பதவி ஏற்றார். தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அடுத்ததாக இந்த ஆண்டே உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் ஆகியன குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணைய தலைவர் பா. ஜோதி நிர்மலாசாமி தலைமையில், எல்லை மறுவரையறை ஆணைய கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று (2ஆம் தேதி) 11.30 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேற்படி, 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யலாம் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மேற்குறிப்பிடப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு எல்லை மறுவரையறை நிர்ணய செயல்முறைகளை விரைந்து முடிக்க ஆணைய தலைவரால் அறிவுறுத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.