திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளைக் கண்டித்து திரிணமூல் சார்பில் கடந்த மாதம் 20ம் தேதி கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மம்தா உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 35 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போது மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்திருப்பது திரிணமூல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. திரிணமூல் எம்பி ககோலி கோஷ் அண்மையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் அவர் நெருக்கமாக உள்ளார். தற்போதைய சூழலில் திரிணமூல் காங்கிரஸுக்கு 28 மக்களவை எம்பிக்கள், 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். இதில் 20 எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் திரிணமூல் எம்எல்ஏக்கள் சந்தீபன் சகா, ரீதாப்ரதா பந்தோபாத்யாய் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். கட்சி விரோத நடவடிக்கை காரணமாக இருவரும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக திரிணமூல் துணைத் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.





