தமிழகத்தில் இன்றைய (ஜூன் 01) நிலவரப்படி தங்கம் விலை கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.நேற்று மே 31-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை எவ்வித மாற்றமுமின்றி நிலையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
தங்கம் விலை விலை திடீர் வீழ்ச்சி







