சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்த அதிமுக-வின் முக்கிய முன்னாள் எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இன்று தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தத் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், பரபரப்பான விவாதங்களையும் கிளப்பியுள்ள நிலையில், இவர்கள் தவெக-வில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதிமுக உட்கட்சிக்குள் நிலவி வந்த கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக, அடுத்தடுத்து தங்களது பதவிகளைத் தூக்கி எறிந்த இந்த மூன்று முக்கியப் புள்ளிகளும், தங்களது எதிர்கால அரசியல் நகர்வுக்காகவே ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களின் இந்த அதிரடி மூவ் எடப்பாடி கூடாரத்திற்குப் பலத்த அடியாகப் பார்க்கப்படும் வேளையில், இவர்கள் அனைவரும் ஏற்கனவே அதிமுக-வில் இருந்து தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது







