முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் 2, தவெக 21 என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும், தவெகவைச் சேர்ந்த 21 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பதவியேற்றவர்களில் 20 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 2 அமைச்சர்களும், 30 – 40 வயதுக்குட்பட்டவர்கள் 9 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற கமலி 28 வயதில் கால்நடை துறை அமைச்சராகி மாநிலத்தின் இளம் அமைச்சராகி இருக்கிறார். சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற 29 வயது கீர்த்தனா அமைச்சராகி இருக்கிறார்.
அறந்தாங்கி தொகுதியில் வென்ற மொஹமது பர்வேஸ் 31 வயது – தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ரமேஷ் 31 வயது – இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
கும்பகோணம் தொகுதியில் வென்ற வினோத் 32 வயது – வேளாண்மைத் துறை அமைச்சர்
திருவாடனையில் வெற்றி பெற்ற ராஜீவ் 33 வயது– சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
தாம்பரம் தொகுதியில் வென்ற சரத்குமார் 34 வயது – மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வென்ற தென்னரசு 36 வயது – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்
எழும்பூர் தொகுதியில் வென்ற ராஜ்மோகன் 39 வயது – பள்ளி கல்வித் துறை அமைச்சர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்ற விஜய் பாலாஜி 39 வயது – கைத்தறி, ஜவுளித் துறை அமைச்சர்






