பிரபல தயாரிப்பாளர் தற்கொலையில் திடீர் திருப்பம்

சக தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி கடனை திரும்ப கொடுக்காததால் மனமுடைந்து தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கடன் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் கே.ராஜன்(85). இவர் சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட முன்னணி நபராகவும் திகழ்ந்தார். அதேநேரம் கடந்த 2000ம் ஆண்டு சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் நின்று தலைவராக வெற்றி பெற்றவர். நடிகர்கள் பிரச்னை என்றாலும், தயாரிப்பாளர்களுக்குள் பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர்.

தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும், சிறு சிறு படங்கள் தயாரிக்கும் நண்பர்களுக்கு பணம் உதவி செய்து வந்தார். தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை தண்டையார் பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.ராஜனுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் சுரேஷ் ராஜன் நடிகராக உள்ளார். கடன் கொடுத்த இடங்களில் இருந்து பணம் வரததால், கே.ராஜனுக்கும் அவரது மகன்களுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் கே.ராஜன் கடந்த 3 ஆண்டுகளாக அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பாம்குரோ ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கே.ராஜன் நேற்று முன்தினம் தனது கார் டிரைவர் தனசேகரனுடன் அடையாறு செல்ல வேண்டி காரில் பயனம் செய்தார்.அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திருவிக பாலம் அருகே கார் வந்த போது, தனது டிரைவரிடம் காரை ஓரம் கட்டி சிறிது நேரம் இருங்கள், நான் பாலத்தின் மீது நடைபயிற்சி செய்துவிட்டு வருகிறேன் என்று கூறி காரில் இருந்து இறங்கி சிறிது தொலைவு மேம்பாலத்தின் நடைபாதையில் நடந்த கே.ராஜன் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு போலீசார், ஆற்றில் குதித்த கே.ராஜன் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. சினிமா தயாரிப்பாளரான கே.ராஜன், சிறிய தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் கொடுத்துள்ளதாகவும், அந்த கடனை அவர்கள் பல ஆண்டுகளாக திரும்ப கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் வாங்கிய சிறிய தயாரிப்பாளர்கள் குறித்து கே.ராஜன் பல சினிமா பட வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.ஆனாலும், கே.ராஜனிடம் ரூ.20 கோடி வரை பணம் வாங்கிய எந்த சிறிய தயாரிப்பாளர்களும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. பணம் குறித்து பல முறை அவர் கேட்டும் அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கே.ராஜனை பணம் வாங்கிய சிலர், 2 நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து கடுமையாக எச்சரித்தும், கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கே.ராஜன் இனி ரூ.20 கோடி திரும்ப வராது என்றும், தனது மகன்களுக்கு நான் என்ன பதில் செல்வோன் என்று கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தான் அவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தற்கொலை செய்து கொண்ட கே.ராஜன் மகன்களான கே.ஆர்.பிரபு, கே.ஆர்.கணேஷ், கே.ஆர்.சுரேஷ் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி அன்பு ஆகியோர் எங்கள் தந்தை மறைவுக்கு ரூ.20 கோடி வரை கடன் வாங்கிய சிறிய தயாரிப்பாளர்கள் தான் காரணம். எனவே அவர்கள் மீது நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ேநற்று காலை 11 மணிக்கு கே.ராஜன் உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கே.ராஜன் உடலை அவரது குடும்பத்தினர் தண்டையார்பேட்டை ைவத்தியநாதன் ெதருல் உள்ள குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர். தயாரிப்பாளர் கே.ராஜன் உடலுக்கு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்தனர். ேக.ராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலி முடிந்து இன்று காசிமேடு சுடுகாட்டில் எரியூட்டப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய தயாரிப்பார்களுக்கு கொடுத்த ரூ.20 கோடி பணத்தை திரும்ப பெற முடியாமல் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.