நான் முதலமைச்சர்.. இபிஎஸ் துணை முதல்வர்..

மிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும் நிலையில், திருமாவளவன் அதனை வெளிப்படையாக பேசி பெரும் புயலை கிளப்பியுள்ளார். அதோடு, தவெகவுக்கு ஆதரவு அளித்த பின்பும், தனக்கு வந்த போன் கால் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்து நடந்த ஆலோசனை குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைய திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக, ஐயூஎம்எல் ஆகியோரின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆளுநர் தலையிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தோம். ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், எங்களை ஒருங்கிணைத்து ஒருமித்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை ஆலோசிக்காமல், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு நேரடியாகத் தவெகவுடன் கூட்டணியாகவே இணைந்துவிட்டனர். இது சற்றே ஏமாற்றமளித்தது என்றார்.