தமிழக முதல்வர் விஜய், தான் பதவியேற்றதில் இருந்து கோட் சூட் காஸ்ட்யூமுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் மழை வெள்ளம் தேங்குகிறது.
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற பேண்டும் அணிவதை வழக்கமாக வைத்து இருந்தார். பிரசாரம், மாநாடு என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக விஜய் இதனை பாலோ செய்து வந்தார். இதனால் விஜய்யின் இந்த காஸ்ட்யூமை அப்படியே அவரது ரசிகர்கள், தொண்டர்களும் ஃபாலோ செய்து அணியத் தொடங்கினர். சிலர் இதனை ஆந்திரபிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காஸ்ட்யூம் எனவும் விமர்சித்து இருந்தனர். குறிப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் கூட இளைஞர்கள் பலர் இதே காஸ்டியூமில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததையும் பார்க்க முடிந்தது. தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் கோட், சூட் அணிந்தது பலரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. நேற்று முதல்வராக பதவியேற்றதில் இருந்து இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் என தலைவர்களை மரியாதை நிமித்தமாக அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்தது வரை அனைத்து நிகழ்வுகளிலும் விஜய் கோட் சூட் காஸ்ட்யூமிலேயே இருந்தார்.






