கோவையில் 5 லட்சம் இளம் வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 114 பேர் உள்ளனர்.எனவே இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் முடிவு கண்டிப்பாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .குறிப்பாக 18 வயது முதல் 19 வயது வரை 63 ஆயிரத்து 790 வாக்காளர்களும், 20 வயது முதல் 29 வயது வரை 4,57,324 பேரும், 30 வயது முதல் 39 வயது வரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 343 பேரும் இடம்பெற்றுள்ளனர்.