திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இருந்த அவசரத்தால், கடைசி நேரத்தில் விசிக-வுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “யார் என்ன தொகுதி கேட்கிறார்களோ அதைக் கொடுத்து அனுப்பி விடுங்கள்” என முதல்வர் சொன்னதன் அடிப்படையில், ஆரம்பத்தில் தர முடியாது என்று சொல்லப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி விசிக-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விசிக தரப்பில் அரூர் தொகுதியை வலியுறுத்திக் கேட்டபோதும் அவர்களுக்கு அரக்கோணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்லாவரம் தொகுதியை எதிர்பார்த்த நிலையில் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டதாகத் திருமாவளவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக-வின் இந்த அவசர கதி முடிவுகள் விசிக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் இந்தக் கூட்டணிக்குள் எழுந்துள்ள இந்த முணுமுணுப்புகள் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பேசுபொருளாகியுள்ளது








