கிறிஸ்தவம் அல்லது பிற மதங்களுக்கு மாறுவதால் பட்டியலின பிரிவில் இருக்கும் மக்கள் அதற்கான தகுதியை இழப்பார்கள் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி, ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்சி/எஸ்டி சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார். மேலும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டமானது பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் அந்த பிரிவில் உள்ள சலுகைகளை ஒருவர் பயன்படுத்த முடியாது எனவும், இது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் எனவும் தெரிவித்தது.
ஒரு சாதிச் சான்றிதழ் இருப்பதை விட சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பின்பற்றும் மதமே தீர்மானிக்கும் காரணியாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோர முடியாது என தெரிவித்துள்ளது.






