சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகளே!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் 6 ஆண்டு விசாரணைக்கு பிறகு காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 19.6.2020 ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். 23.6.2020 கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவரும் இருவரும் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர்.பின்னர் சிபிஜ. விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,எஸ்.ஐ ரகு கணேஷை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் தலைமைக் காவலர் முத்துராஜை,உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது மதுரை சிறையில் உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்