பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, காலநிலை மாறுபாடு மற்றும், டிட்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மறு தேதி அறிவிக்கும் வரை கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் சகஜ நிலை திரும்பிய நிலையில் இன்று காலை நாகப்பட்டினம் – இலங்கை இடையான கப்பல் சேவையை சுபம் கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். 77 பயணிகளுடன் இலங்கை புறப்பட்ட கப்பல் மறு மார்க்கத்தில் 80 பயணிகளுடன் இலங்கையில் இருந்து இன்று மாலை நாகை துறைமுகம் வர உள்ளது.
நாகை – இலங்கை மீண்டும் தொடங்கியது!







