1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்..

Untitled design - 1

த்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-ஈரான் போரினால் துபாயின் ஜபல் அலி துறைமுகத்தில் மகாராஷ்டிராவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 800 முதல் 1,000 கன்டெய்னர்கள் முடங்கியுள்ளன. இதனால் அம்மாநில விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல கோடி ரூபாய் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக திராட்சை, மாதுளை, வெங்காயம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற அழுகக்கூடிய வேளாண் பொருட்கள் துறைமுகங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.

ரம்ஜான் கால தேவையை முன்னிட்டு திட்டமிடப்பட்ட இந்த ஏற்றுமதி, பிப்ரவரி 28 முதல் முடங்கியுள்ளது. சுமார் 6,000 டன் திராட்சைகள் துறைமுகங்களில் சிக்கியுள்ள நிலையில், தோட்டத்தில் உள்ள 10,000 டன் திராட்சைகளை உள்நாட்டுச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கன்டெய்னரின் மதிப்பு சராசரியாக ரூ.24 லட்சம் என்பதால், ஒட்டுமொத்த இழப்பு மிக அதிகமாக உள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.