மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் பாகுபலி யானை.!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் சேராமல் பாகுபலி காட்டு யானை  தனியாக நடமாடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் – குன்னூர் ரோடு ஓடந்துறை பகுதியில் உலா வந்தது. அதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் நெல்லித்துறை வன பகுதிக்குச் சென்ற பாகுபலி யானை  மீண்டும் மேட்டுப்பாளையம் காப்பு காட்டு பகுதிக்கு சென்றது. முன்னதாக அங்குள்ள ஒரு தனியார் உணவகத்துக்கு செல்லும் வழியில் இருந்த தடுப்பு கம்பியை பாகுபலி யானை தனது துதிக்கையாலும், தந்தத்தால் உடைத்து சேதப்படுத்தியது. பாகுபலி யானை சாலையில் உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.