இரவில் ஹாயாக உலா வரும் சிறுத்தைகள், கரடி – வீடியோ வைரல்

குடியிருப்பு பகுதியில் 2 சிறுத்தைகள் உலாவிய காட்சிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற கரடியின் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி, சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
அண்மை காலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதோடு, வளர்ப்பு நாய்களையும் வேட்டையாடி செல்வது தொடர் கதையாவே உள்ளது. இந் நிலையில் அருவங்காடு ஜெகதளா பகுதி குடியிருப்பு Cctv கேமராவில் 2 சிறுத்தைகள் உலா வந்ததை கண்டு அச்சத்தில்  ஆழ்ந்தனர். இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற கரடியை வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னால் கார் வருவதை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அந்த கரடி நடந்து சென்றது..