EXCLUSIVE REPORT:
யானை,சிறுத்தை வாழும் வனப்பகுதி மலையை வெட்டி, வீடுகள் கட்டப்பட்டுள்ளதை, வனத்துறையும், வருவாய் துறையும் கண்டும் காணாமல் இருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரமாக மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லக்கூடிய சாலையில் உள்ள சிக்கதாசன்பாளையம் பஞ்சாயத்தில் தான் இந்த அவலம் அரங்கேறி உள்ளது .நேஷனல் மாடல் பள்ளிக்கு எதிரியே இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி எடுத்து வீடு கட்டி உள்ள காட்சிகள் தான் இது. பாதுகாக்கப்பட வேண்டிய மலையை வெட்டி எடுத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளுக்கு. வருவாய் துறையும் அனுமதி கொடுத்துள்ளது. வீட்டு மனைக்கான அங்கீகாரமும் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் இருந்து 300 அடிக்குள், எந்த ஒரு கட்டுமானமும் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் இந்த சட்டமும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது, இந்த வீடியோ காட்சி மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிறது. யானை, சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. வனவிலங்குகள் வாழும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி, இயற்கையை அழிக்கும் செயலுக்கு, அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மலையை வெட்டக்கூடாது, வனப்பகுதியை சீரழிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இருந்தும், விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் ஆதரவால், ரியல் எஸ்டேட் தொழில் பணம் கட்டி பறப்பதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறை மீறல் குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது, வனத்துறை தான் நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் கொடுத்ததாகவும், அதனால் வீட்டு மனை அங்கீகாரம் கொடுத்ததாக கூறுகிறார்கள். மழை வெட்டப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டால், வருவாய்த்துறை வீட்டுமனை அங்கீகாரம் கொடுத்ததால், வனத்துறை அனுமதித்துள்ளதாக கூறுகிறார்கள்.

வனப்பகுதி, குடியிருப்புகளாக மாற்றம் பெறுவதால் தான், வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதாக கூறப்படுகிறது.அரசுத்துறை அதிகாரிகள் இயற்கையை கொள்ளையடிக்கும் கயவர்களுக்கு துணை போனது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.









