தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வீடும், தெருவும், நகரமும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது தூய்மை பணியாளர்களின் பணியாகும்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.இந்த தூய்மை பணியாளர்கள் கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரிந்து வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் இதனை உரமாக மாற்றும் பணியை செய்கின்றனர். இதன்மூலம் கிராமம் தூய்மையடைவது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக தூய்மைக் காவலர்களுக்கு மூன்றுசக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவர்களுது மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் தங்களது ஊதியத்தை அதிகரித்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் தான் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதற்காக கூடுதலாக ரூ.112 கோடி ஒதுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இதனை செயல்படுத்தும் வகையில், தூய்மைக் காவலர் மாதாந்திர மதிப்பூதியம் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் 66,130 தூய்மைக் காவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்காக 396.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வழங்க பட்டுவருகிறது. இந்த நிலையில் 5000 ரூபாய் மதிப்பூதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இதனை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் 5000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்படுள்ளது.






