மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு காலநிலை சூழ்நிலைகளில், வேளாண் தயாரிப்புகளின் செயல் திறன் மற்றும் செயல்பாட்டை அறிவியல் முறையில் மதிப்பீடு செய்து, பாதுகாப்பான நிலைத்த மற்றும் விவசாய மையமான வேளாண் புதுமைகளை ஆதரிப்பது, இச் சேவைகளின் நோக்கமாகும்.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆசைத்தம்பி மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தர் கா. சுப்பிரமணியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் முனைவர் சி.பாபு, தாவர உயிர் தொழில்நுட்ப துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ஈ. கோகிலா தேவி, துணைவேந்தர் காண தொழில்நுட்ப தனி அலுவலர் முனைவர் ஆர். சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







