புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து..!!

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளி, காலணி, வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி குறைவதால் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன.
இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் இந்தியாவின் ஜவுளி, காலணி, வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி கணிசமாக குறையும். இதனால் இந்திய பொருட்களுக்கு ஐரோப்பாவில் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதேபோல ஐரோப்பாவின் கார்கள், ஒயின்கள் போன்ற பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படுவதால் அவற்றின்விலையும் இங்கு கணிசமாக குறையும் நிலை ஏற்படும். இந்தியா ஏற்கெனவே பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும் தென் அமெரிக்க நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. தடையற்ற வணிக ஒப்பந்தங்கள் காரணமாக உலகசந்தையில் அமெரிக்காவின் முக்கியத்துவம் குறையத்தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய கார்களுக்கான வரியை இந்தியா வெகுவாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய கார்களுக்கு தற்போதுள்ள 110% வரியை 40%ஆக இந்தியா குறைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய கார்களான ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்யும்போது அவற்றின் விலைவெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து வரி நெருக்கடி அளித்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் மிகுந்த கவனம் பெறுகிறது