பால தண்டாயுதபாணி கோவில் தைப்பூச திருவிழா

கோவை காந்தி பார்க், சுக்கிரவார் பேட்டையில் அருள்மிகு.பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி வழிபாடு இரவு 10 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நாளை மறுநாள் ( சனிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றம் சுவா திருவீதி உலா நடக்கிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டு அருளரை வழங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடக்கிறது. மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்..மேலும் ஒவ்வொரு நாளும் பக்தி நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் 1-ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு தங்கத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 4 -ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.இதற்கான ஏற்பாடுகளைகோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன், அறங்காவலர்கள் மகேஸ்வரன், விஜயலட்சுமி, ராஜா, செயல் அலுவலர் தேவி பிரியா,மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.