வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு கார்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இந்த பேரணியை கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி வ உ சி மைதானத்தில் தொடங்கி எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை, பாலசுந்தரம் ரோடு, பெண்கள் , காந்திபுரம் பஸ் நிலையம், செம்மொழி பூங்கா வழியாக மீண்டும் வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தது .இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன் (கோவை மத்தியம்) எம் .பிரதீபா ( மேற்கு) பூங்கோதை (தெற்கு) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் கார்களில் சீட்டு பெல்ட் அணிந்து பயணம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்புகளை கடைபிடிப்பது தொடர்பாகவும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது கோவை மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் முறையாக சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரில் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு..!









