ஒரே கல்லால் செதுக்கபட்ட உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்..!!

பிகாரில் கட்டப்பட்ட விராத் ராமாயண கோயிலுக்காக மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர சிவலிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிகாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டத்தில் உள்ள கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்​டப்​பட்டு வரு​கிறது. கம்போடியாவின் அங்கோர்வாட், ராமேஸ்வரம் ராமநாந்த சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களின் வடிவமையில் 500 கோடி ரூபாய் செலவில் இந்த கோயில் கட்டப்படுகிறது.
இந்நிலையில், கோயில் வளாகத்​தில் 33 அடி உயரத்​தில் உலகின் மிகப்​பெரிய சிவலிங்​கம் பிர​திஷ்டை செய்​யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேத மந்திரங்கள் முழங்க ராட்சத கிரேன்கள் உதவியுடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்பி பரவசமடைந்தனர்.இந்த லிங்​கம், சென்னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் வடிவமைக்கப்பட்டது. 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் செதுக்​கப்​பட்​டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இதில், ஆயிரத்து 8 சிவலிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.