விஜய்யிடம் வாக்குமூலம் பெற்ற சிபிஐஅதற்குள் அதிகப்படியான கூட்டம் கூடி நிலைமை கைமீறிப் போனது. அதற்கு மேல் விபரீதம் ஏற்பட்டு விடக் கூடாது எனக் கருதியே வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக விஜய் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது.இவற்றை ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தவெக நிர்வாகிகளின் வாக்குமூலங்கள் உடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். இதை வைத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றனர். இந்நிலையில் ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தவெக பொதுக்கூட்டத்திற்கு வெளிநாட்டு நிதி அதன்படி, நேற்றைய தினம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் செல்கிறார் கரூர் சம்பவம் தொடர்பாக இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.இதற்கிடையில் மற்றொரு முக்கியத் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதுதொடர்பான விவரங்கள் சிபிஐ கைக்கு கிடைத்திருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
சென்னை திரும்ப விஜய் திட்டம் இந்த விவகாரம் குறித்து விஜய் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத வரை, இதுபோன்ற தகவல்கள் வெறும் யூகங்களாகவே வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் காரணமாக இன்று மாலையே சென்னை திரும்புவார் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு 12 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உடன் நாளைய தினம் (ஜனவரி 20, 2026) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனையில் தவெக தலைவர் விஜய் ஈடுபடவுள்ளார். இந்த குழுவிற்கு கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமை வகிக்கிறார். இவர்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை பெற்று விரிவான அறிக்கையை தயாரிக்கவுள்ளனர்.








