கோவை பீளமேடு சித்ரா விமான நிலைய ரோட்டில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சென்றார். அங்கிருந்த ஓட்டல் சப்ளையரிடம் “ஆம்லெட்” வேண்டும் என்று கேட்டார். அவர் ஓட்டல் மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சப்ளையர் இளங்கோவை தாக்கி அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து சேதபடுத்தினார் . பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார் . இது குறித்து சப்ளையர் இளங்கோ பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிவு செய்து சித்ரா , பூங்கா நகரை சேர்ந்த கருணாநிதி மகன் கண்ணன் ( வயது 23) என்பவரை நேற்று மாலை கைது செய்தார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
ஒட்டலில் புகுந்து ஊழியரை தாக்கி மேஜை, நாற்காலி உடைப்பு..!









