பொங்கல்!! 2 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்.!!

தொழில் நகரமான கோவையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் பொங்கல் பண்டிகையையொட்டி அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இதனால் கோவையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அதுபோன்று கோவையிலிருந்து மதுரை ,நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருச்சி, புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சாவூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் தனியார் ஆம்னி பஸ் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 2 பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர்..