வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு!ஒருவர் கைது!

நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் சுமார் 4 அடி அளவிலான இரண்டு கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது.மேலும் விதை போட்டு சிறுசிறு பத்துக்கும் மேற்பட்ட செடிகள் முளைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து சங்கரன் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.