2 ஆண்டுகளாக யானை உயிரிழப்பு இல்லை-சுப்ரியா சாகு X தளத்தில் பதிவு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ரயில் தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.இதற்கு காரணம், 2022-ல் அமைக்கப்பட்ட AI அடிப்படையிலான யானை முன்னெச்சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 யானைகள் பாதுகாப்பாக ரயில் தடத்தைக் கடந்து உள்ளன.இதுகுறித்து இந்திய வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு தனது சமூக வலைதள பதிவில்…

எனது குழுவுடன் AI மையத்தைப் பார்வையிட்டதாகவும், மதுக்கரை தடத்தில், 2 ஆண்டுகளாக யானை உயிரிழப்பு இல்லை. தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் மனித – யானை மோதலைத் தவிர்க்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.இந்த AI அமைப்பு யானைகளை கண்டறிந்து, உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு எச்சரிக்கை அனுப்புவதால், ரயில் வேகத்தைக் குறைத்து யானைகள் பாதுகாப்பாக கடக்க உதவுகிறது என்று தனது எக்ஸ் பதிவிட்டு உள்ளார்.இந்த வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் வரவேற்று உள்ளனர். இதே போன்ற அமைப்பு மற்ற ரயில் தடங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.