ரசாயன உரங்கள்,பூச்சிக்கொல்லிகள் காரணமாக நிலத்தின் வளம் வீழ்ச்சி அடைகிறது-மோடி.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது:

கோயமுத்தூரில் இந்த புனிதமான மண்ணிலே மருதமலையில் குடிகொண்டு இருக்கும் முருகன் கலாச்சாரம் கனிவு கவின் படைப்புத் திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி இந்த நகரமானது தென்பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம்

இங்கே இருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்க கூடியது. மேலும் இப்போது கோயமுத்தூர் மேலும் ஒரு காரணத்தால் சிறப்பு பெறுகிறது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி பி ராதாகிருஷ்ணன் இப்போது துணை குடியரசு தலைவராக நம் அனைவருக்கும் வழிகாட்டி கொண்டு இருப்பதாக கூறினார் .

இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று இது என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. நான் தமிழ்நாட்டின் அனைத்து வேளாண் குடிமக்களுக்கும் நண்பர்களுக்கும் தென்னிந்திய இயற்கை விவசாயம் மாநாட்டின் பொருட்டு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக இங்கே மேடைக்கு வருவதற்கு முன்பாக நான் அங்கே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் பல்வேறு அரங்குகளை சென்று பார்த்தேன், ஒருவர் இயந்திரப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்திற்கு வந்து உள்ளதாகவும், ஒருவர் இஸ்ரோவை விட்டு விட்டு அந்த வேலையை விட்டு விட்டு இங்கே வேளாண் தொழிலை புரிய வந்து உள்ளதாகவும், அவர்களுடைய இந்த பணி மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், ஒருவேளை நான் இங்கே வாராது போயிருந்தால் நான் பல விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன் என்னுடைய கற்றல் குறைந்து போய் இருக்கும் என்றவர், இந்த வேளையிலே நான் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களை உங்களுடைய துணிச்சலுக்காக காணிக்கையாக்குவதாக கூறினார்.

விவசாய அறிவியல், தொழில் துறையோடு இணைந்த நண்பர்களும் சாதப்புகளும் புதுமைகள் கண்டுபிடிப்பாளர்களும் ஒன்றாக இணைந்து இருக்கின்றார்கள் நான் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

வர இருக்கின்ற ஆண்டுகளிலே பாரதத்தின் வேளாண் துறையில் பல பெரிய மாறுதல்கள் ஏற்பட விருப்பத்தை நான் காணிக்கையாக்குவதாகவும். பாரதம் இயற்கை விவசாயத்தில் உலகளாவிய மையப் புள்ளியாக ஆகும், பாதையிலே பயணிக்க தொடங்கி இருக்கின்றது. நம்முடைய உயிர் பன்முகத் தன்மை ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகின்றது. தேசத்தின் இளைஞர்களும் கூட இப்போது விவசாயத்தை நவீனமானதாகவும், அளவிடக் கூடிய சந்தர்ப்பமாகவும் காணத் தொடங்கி இருக்கின்றார்கள். முக்கியமாக இதனால் ஊரகப் பகுதி பொருளாதாரம் மேம்படும் என்பதை என்னால் சொல்ல முடியும் என்றவர்,

கடந்த 11 ஆண்டுகளிலே தேசத்தின் ஒட்டுமொத்த வேளாண் துறையிலும் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. நம்முடைய வேளாண் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகி இருப்பதாகவும், விவசாயத்தை நவீனப்படுத்த அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி புரிய தேவையான அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி உள்ளதாகவும்,

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன எனவும், 7 ஆண்டுகளுக்கு முன்பாக கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், மீன் வளர்ப்பாளர்களுக்கும் இந்த விவசாய கடன் அட்டை வசதி கிடைத்த பிறகு அவர்களும் கூட இதனால் நிறைவான பலன்களை பெற்று வருகின்றார்கள். உயிரை உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்கப்பட்டதாலும், விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்து இருக்கின்றன என்றும் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூளைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கே தமிழ்நாட்டிலும் கூட பல லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளிலும் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ கொடை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளிலே செலுத்தப்பட்டாகி விட்டது. இந்த தொகை விவசாயத்தோடு தொடர்புடைய பல்வேறு பணிகளை நிறைவேற்றிக் கொள்ளும், சாதகமாக விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. இந்தத் திட்டத்தால் பயனடைந்த கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நான் என் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்

அங்கே ஒரு சிறுவன் கையிலே ஒரு பதாகையை ஏந்தி கொண்டு இருக்கின்றான். அந்த குழந்தை இடம் இருந்து பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் அந்த பதாகையை வாங்கிக் கொண்டு வாருங்கள் கண்ணா அதுல என்ன எழுதி இருக்கோ அதை நான் சீரியஸா எடுத்துக்கிறேன்.

இயற்கை வேளாண்மையின் விரிவாக்கம் என்பது இன்று 21 ஆம் நூற்றாண்டு வேளாண்மையின் தேவை கடந்த சில ஆண்டுகளிலேயே தேவையின் அதிகரிப்பு காரணத்தாலே வயல்களிலே விவசாயத்தோடு தொடர்புடைய பல துறைகளிலே ரசாயனங்களின் பயன்பாடு விரைவாக அதிகரித்து வருகின்றது

ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அதிக அளவில் காரணமாக நிலத்தின் வளம் வீழ்ச்சி அடைகிறது. மண்ணின் வீரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இவை அனைத்தோடு விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இதற்கான தீர்வு என்னவென்றால் பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே சாத்தியம் எனவும், நம்முடைய மண்ணின் வளத்தை பொருட்டும். பயிர்களின் ஊட்டச்சத்தின் மீள் உயிர்ப்பின் பொருட்டும் நாம் இயற்கை வேளாண்மை பாதையிலே முன்னேறியே ஆக வேண்டும் இதுவே நம்முடைய தொலைநோக்கு இது நம்முடைய அத்தியாவசிய தேவையும் கூட அப்போது தான் நாம் நமது வர இருக்கும் தலைமுறையினருக்கு நமது உயிரி பன்முகத்தன்மையை பாதுகாத்து அழிக்க முடியும்.

வேளாண்மையானது சூழல் மாற்றம் பருவ நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை எதிர்கொள்ள நமக்கு பேரு உதவியாக இருக்கின்றது, இது நமது மண்ணின் நலத்தையும், ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவுகின்றது. மேலும் இதனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடிகின்றது. இன்றைய இந்த மாநாடு இந்த திசையில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க இருக்கின்றது எனவும்,
நமது அரசாங்கம் பாரதத்தின் விவசாய பெருமக்கள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள நிறைய ஊக்கம் அளித்து வருகின்றது ஓராண்டுக்கு முன்பாக மத்திய அரசு இயற்கை விவசாய தேசிய நோக்கினை தொடங்கி வைத்தது இதன் காரணமாக லட்சாப லட்சம் விவசாயிகளால் ஒன்றிணை முடிந்தது என்றார்.
இது ஏற்படுத்திய ஆக்கபூர்வமான தாக்கத்தை குறிப்பாக மொத்த தென்பரதத்திலும் நன்கு காண முடிகிறது. இங்கே தமிழ்நாட்டிலும் கூட சுமார் 35,000 ஹெக்டர் அளவு நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும்,
நண்பர்களே இயற்கை வேளாண்மை பாரதத்தின் சொந்தமான சுதேசி கருத்து இதை நாம் எங்கு இருந்தோம், யாரிடம் இருந்தும் பெறவில்லை, இறக்குமதி செய்யவில்லை, அதாவது இது நமது பாரம்பரியத்தில் பிறந்தது. நம்முடைய சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனக் தெரிவித்தார்.

விவசாயிகள் இயற்கை வழி வேளாண்மையின் பாரம்பரியங்களாக பஞ்சகவ்வியம், ஜீவாமிர்தம் போன்றவற்றை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

நண்பர்களே இயற்கை வேளாண்மையோடு கூடவே நாம் ஸ்ரீ அன்னம் அதாவது சிறுதானியங்கள் பயிர் செய்வதையும் இணைக்க வேண்டும், இவை நம்முடைய இந்த பூமித்தாயின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பினை அளிக்கின்றது தமிழ்நாடு.

உன்னுடைய தமிழ்நாட்டிலே முருகப்பெருமானுக்கு தேனும், திணை பொருட்களாக நாம் படைக்கின்றோம் தமிழ்நாட்டிலே கம்பு, சாமையும், கேரளத்திலே ராகி, தெலுங்கு பேசும் பகுதிகளிலே சத்யா மற்றும் சுன்னா ஆகியவை பல தலைமுறைகளாக நம்முடைய உணவு பழக்கத்தோடு ஒன்று கலந்தவை என்றவர்,

முயற்சி என்னவென்றால் நமது இந்த சூப்பர் உணவானது உலகெங்கிலும் இருக்கும் சந்தைகள் வரை சென்று சேர வேண்டும் என்பது தான் மேலும் உலகளாவிய தந்தைகளிலும் இவற்றின் தேவையை அதிகரிக்க இயற்கை வேளாண்மை ரசாயனங்கள் இல்லா, வேளாண்மை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கின்றது. ஆகையினால் தான் இந்த மாநாட்டிலே இதோடு தொடர்புடைய முயற்சிகள் தொடர்பாகவும் கண்டிப்பாக விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் கருந்துகிறேன் எனக் கூறினார்.

ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகை பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆழமான விருப்பம், இதற்கான கருத்து தூக்கம் உத்வேகம் தென்பாரதத்தின் பல பகுதிகளில் இருந்து நமக்கு கிடைக்கின்றது. பகுதிகளுக்கு சென்றோமே ஆனால் அங்கே பல் அடுக்கு வேளாண்மையை நம்மால் காண முடியும், இவற்றுக்கு இடையே கீழே ஊடு பயிராக மசாலா பொருட்கள் மிளகு போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. அதாவது ஒரு சின்ன பகுதியிலேயே கூட இத்தனை பயிர்களுக்கும் நிறைவான ஏற்பாடுகளை செய்து பயிர் செய்து இருக்க முடியும் இதுதான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை கோட்பாடு என்றவர் இது மாதிரி நாம் இந்தியா நெடுக கொண்டு செல்ல விரும்புகின்றோம், இதன் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று நான் மாநில அரசுகளிடம் வேண்டிக் கொள்ளுகின்றேன் அதாவது எப்படி இந்த வழிமுறைகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமல் செய்வது என்பதை நாம் ஆராய வேண்டும் என்றும், விவசாயத்தின் ஒரு வாழும் பல்கலைக் இடமாக இருந்து வருகின்றது. இந்தப் பகுதியிலே உலகத்தின் மிகப் பழமையான இன்றும் கூட செயல்பட்டு வரும் அணைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன இங்கே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கராயன் கால்வாய் உருவாக்கப்பட்டது. இங்கே இருக்கும் ஆலயங்களில் அமைந்த பரவலாக்கப்பட்ட நீர் பராமரிப்பு முறைகள் புலன்கள் அதை ஒரு மாதிரி ஆன. இந்த மண்ணின் ஓடு நதிகளின் நீரை நெறிப்படுத்தி இதை விவசாயத்திற்காக பயன்படுத்தியது. இது ஒரு மாதிரியாக உருவானது இந்த மண்ணில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே தேசத்திலும் சரி உலகினும் சரி இயற்கை வேளாண்மைக்காக தலைமை ஏற்பு என்றால் அதுவும் கூட இந்த நிலப்பகுதியில் இருந்து தான் கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை என்றார்.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக வருங்கால விவசாய சூழல் அமைப்பினை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணி புரிய வேண்டும் என்றும் இயற்கை விவசாயம் செய்யும் சகோதர சகோதரிகளாகட்டும் நீங்கள் அனைவரும் ஒரு ஏக்கர் ஒரு பருவம் என்பதில் இருந்து தொடங்குங்கள், அதாவது நீங்கள் ஒரு பருவ காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வதை தொடங்குங்கள் அதில் இருந்து உங்களுக்கு என்ன பலன்கள் என்ன விளைவுகள் கிடைக்கிறதோ ? அதை பொறுத்து விரிவாக்கம் செய்யுங்கள் என்று நான் என்னுடைய விவசாய சகோதர சகோதரிகளிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன் இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கியமான பங்காக ஆக்குங்கள், கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் வயல்களை உங்களுடைய பரிசோதனை கூடங்களாக ஆக்குங்கள் என்று நான் அனைத்து அறிவியலாரர்களிடமும் ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்ளுகின்றேன். நான் இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும் எனக் கூறியவர்,

இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்திலே மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கங்களின் பங்களிப்பு மகத்தானது கடந்த சில ஆண்டுகளிலே தேசத்தில் பத்தாயிரம் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாகி இருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உதவவியோடு நாம் விவசாயிகளின் சின்னச் சின்ன குழுக்களை உருவாக்கி இருக்கின்றோம், அவர்களுக்கு சுத்தப்படுத்தல், பதப்படுத்தல் வசதிகளை செய்ய செய்து தர வேண்டும், மின்னணு சந்தை போன்ற இணையவழி சந்தைகளோடு நேரடியாக இணைக்க வேண்டும், இதன் வாயிலாக இயற்கை வேளாண்மையோடு இணைந்த விவசாயிகளுக்கு மேலும் லாபம் கிடைக்கும் சாத்திய கூறுகள் உண்டாகும் என தெரிவித்தவர்,

பாரம்பரியமான ஞானம் அறிவியலின் பலம் அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய இந்த மூன்றும் இணையும் போது விவசாயிகளும் வளம் பெறுவார்கள். தன்னிறைவடைவார்கள் அதோடு கூடவே நம்முடைய பூமி தாயும் ஆரோக்கியமாக இருக்கின்றாள் எனக் கூறினார்.

எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. மிகப்பெரிய நம்பிக்கை அது என்னவென்று சொன்னால் இங்கே ஆர்வத்தோடு இந்த மாநாட்டிலே பங்கெடுப்பதற்காக வந்து இருக்கும் வேளாண் பெருமக்களும் சரி, உங்களுக்கு தலைமை ஏற்று நடத்திக் கொண்டு இருக்கும் இந்த தலைமையாளர்களும் சரி, இவர்கள் காரணமாக இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு ஒரு புதிய திசை காட்டும் இங்கு இருந்து உருவாகும் புதிய கருத்துக்கள் எண்ணங்கள் மூலமாக புதிய தீர்வுகள் பிறக்கும் இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் பல நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி எனக் கூறினார் .