இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு பல்வேறு வகையான நூல்களை வழங்கி வருகிறோம் . கடந்த 4 மாதமாக 30 கவுண்ட் நூல்களுக்கு போதிய ஆர்டர்கள் இல்லை, இதனால் உற்பத்தி குறைந்து நூல்கள் ஜவுளி பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளது.
கடந்த அக்டோபர் முதல் பருத்தி சீசனை ஒட்டி சந்தைக்கு பருத்தி வரத்து தொடங்கியது.ஒரு கேண்டி பருத்தி ரூபாய் 6,000 வரை விலை குறைந்தது. இதன் காரணமாக ஸ்பின்னிங் மில்கள் கடந்த மாதம் நூல் விலையை ,கிலோ ஒன்றுக்கு ரூபாய் 8 முதல் ரூபாய் பத்து வரை குறைந்தன.
ஆனால் கடந்த இரண்டு மாதமாக பருத்தியில் இருந்து வெளியேறும் கழிவு பஞ்சின் விலை ரூபாய் 2 முதல் ரூபாய் 4 வரை உயர்ந்து உள்ளது.இதனால் கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு நூலை வழங்கி வரும் மில்கள் உயர்த்தப்பட்ட கழிவுப் பஞ்சின் விலைக்கு இணையாக நூல் விலையை உயர்த்த இயலாது.கடந்த மாத விலைக்கே, கழிவுப் பஞ்சுகளை வாங்குவது, விலை குறையவில்லை என்றால், நஷ்டத்தை தவிர்க்கவும், கழிவுப் பஞ்சு கையிருப்பு இருக்கும் வரை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
20, 25, 30 கவுண்ட் நூல்கள் உற்பத்தி செய்யும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் சூரிய ஒளி சக்தியில் இயக்குபவர்கள் பகலில் இயக்குவது, மற்றவர்கள் சகஜ நிலை திரும்பும் வரை வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடுவது என முடிவு செய்து உள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்.









