பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, சபாநாயகர் என்ற முறையில் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இது போன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டாவது முறையாக ஸ்டாலினே முதல்வராக பொறுப்பேற்பார் என நெல்லை மாவட்டம் பனங்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடந்த விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் . இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 17,799 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
விழாவின் நிறைவில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்ஐஆர் என்ற ஒரு புதிய சாப்ட்வேரை உருவாக்கி சுமார் 6 சதவீதம் அளவிற்கு அந்த சாப்ட்வேர் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் மாநிலத்தில் வரலாறு காணதா வாக்கு பதிவு என்கிறார்கள்.இந்த வாக்கு பதிவில் சந்தேகம் இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.தேர்தல் ஆணையம் தன்னை நிரபராதி என நிருப்பிக்க வேண்டுமானால், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்த தில்லுமுல்லு நடக்கவே நடக்காது. இரண்டாவது முறையாக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார் என்றார்.








