கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மேத்ரா ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது இதனால் மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் .கவி சரவணகுமார் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார் .நேற்று முன்தினம் காலையில் கவி சரவணகுமார் தனது வீட்டுக்கு வந்து குழந்தைகளை பார்த்து விட்டு சென்றார். இதை யடுத்து சஞ்சய் கல்லூரிக்கும் நேத்ரா பள்ளிக்கும் சென்று விட்டனர் மகேஷ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு கத்தியுடன் ஒருவர் வந்தார் .அவர் தன்னை தாளியூரை சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்றும்,தாளியூரை சேர்ந்த அதிமுக பிரமுகரான கவி சரவணகுமாரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருவதாகவும், அவரது மனைவி மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகவும் கூறி சரண அடைந்தார் .அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து தடாகம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு வீட்டுக்குள் மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே போலீசார் அவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள். மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது மகேஸ்வரியை சுரேஷ் கொலை செய்ய வாய்ப்பு இல்லை .இந்த கொலையை வேறு யாரோ செய்து விட்டு அவரை போலீசில் சரணடைய வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினர். போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :-கொலை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் செயல்பாடுகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. சரணடைந்த சுரேஷ் மகேஸ்வரியின் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உள்ளார். அவர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியில் வேறு நபர்களின் கைரேகை பதிந்து உள்ளதா? என்று கண்டறிந்து வருகிறோம் இந்த கொலையில் சில சந்தேகங்கள் உள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். மகேஸ்வரியின் கணவர் சரவணகுமாரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். .





