நாளை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி.!!

கோவை : துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு முதல் முறையாக நாளை ( செவ்வாய்க்கிழமை) வருகிறார் .அவருக்கு கோவை விமானத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவை கொடிசியாவில் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அவர் டவுன்ஹால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் .இதையடுத்து துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பூர் புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையை ஒட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இதற்கிடையே கோவையில் இன்று ( திங்கள் கிழமை) முதல் 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதிகோவை கொடிசியா , ரெட் பீல்டு, டவுன்ஹால் பேரூர், மருதமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் சாலைகள் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க இன்று ( திங்கள்கிழமை) முதல் நாளை மறுநாள் ( புதன்கிழமை) இரவு 10 மணி வரை 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி மேற்கண்ட பகுதிகளில் டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.