கந்து வட்டி கேட்டு மிரட்டல் – தம்பதி மீது வழக்குபதிவு..!

கோவை கணபதியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் ( வயது 57) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதற்கு அவர் தற்போது வரை ரூ1 கோடி 50 லட்சம் வட்டியாக கொடுத்துள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர் ரூ 65 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கு வட்டியாக தினமும் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் ஜான் மைக்கேலின் மனைவி மற்றும் குழந்தையை கடத்திச் சென்று உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்து விடுவோம் என்று மிரட்டினார்களாம். இது குறித்து ஜான் மைக்கேல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லோகநாதன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.