கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 30) இவர் ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. அதேபோல ரத்தினபுரி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்றதாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் ( வயது 27 )என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தருக்கு பரிந்துரை செய்யப்பட்டது .அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகநாதன், சுதாகர் ஆகியோரிடம் நேற்று வழங்கப்பட்டது.
நகை பறிப்பு, கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்.!!





