காவல் நிலையத்தில் புகார் செய்த வாலிபருக்கு அடி, உதை – 2 திருநங்கைகளுக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை அம்மன் குளம் ,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 23) இவர் பணம் – கொடுக்கல் வாங்க தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் யாசினி, அப்ரின், ஆகியோர் மீது இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 திருநங்கைகளும் சேர்ந்து ஜெகநாதனை அடித்து உதைத்தார்களாம். இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெகநாதன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் திருநங்கைகள் யாசினி, அப்ரின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்